வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (21:51 IST)

பாத்ரூமில் டப்பிங்? பதிலடி கொடுத்த சிம்பு!!

சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். 
 
இதனால், நிகழ்ச்சியில் சிம்புவும் கலந்துக்கொண்டுள்ளார். கடந்த வாரம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய AAA பயங்கர தோல்வி அடைந்தது. இந்தப் படத்துக்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் மைக்கேல் ராயப்பன்.
 
இதற்கு பதிலளிக்க எனக்கு அவசியமில்லை என சிம்பு கூறியிருந்தார். தற்போது இது குறித்து சிம்பு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மணி சார் படம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்குகின்றது, அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, பணத்திற்காக மைக்கல் ராயப்பன் என்ன வேண்டுமானாலும் சொல்வார்.
 
அவர் என்ன சொன்னாலும் மக்கள் நம்ப போவதில்லை, நான் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வேன், ஆனால், பாத்ரூமில் டப்பிங் பேசுவேன் என்று சொன்னதை மட்டும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.