1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2017 (12:00 IST)

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பற்றி ஓபனாக பேசிய சிம்பு

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில், இப்படத்தின் இசையமைப்பாளர் சிம்பு மற்றும் தனுஷ் கலந்து கொண்டனர். சேதுராமன் இயக்கத்தில், விடிவி கணேஷ் தயாரிக்கிறார். தனுஷ் மேடையில் இருக்கும்போது, சிம்பு அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இறைவனுக்கு நன்றி எனச் சொல்லி பேசத் தொடங்கினார் சிம்பு. "சந்தானத்தை நான் சினிமாவில் அறிமுகப்படுத்தவில்லை. அவரோட திறமைக்கு என் மூலமா அங்கீகாரம் கிடைச்சிருக்கு. நான் தான் அவரை அறிமுகப்படுத்துனேனு இனியும்  சொல்லவேணாம். நான் இன்னிக்கு ஒரு மியூசிக் டைரக்டரா இருக்கேன்னா அதுக்கு முதல் காரணம் யுவன் ஷங்கர் ராஜாதான்.
 
தனுஷ்க்கு ஏதாவது பிரச்னைனா சிம்புவ இழுக்குறது, சிம்புவுக்கு ஏதாவது பிரச்னைன்னா தனுஷை இழுக்குறதும் இங்கே பழக்கமா இருக்கு. எதிரிகள்னு சொல்லப்படுற ரெண்டு பேரும் வளர்ந்து உயரத்துக்கு போவோம். 'காதல் கொண்டேன்' படம் பார்க்கும்போது என் பக்கத்தில் செல்வராகவன் உக்காந்திருந்தார். படம் சூப்பர் ஹிட்டுனு சொன்னேன். 'காதல் கொண்டேன்'  படத்தை தனுஷ் கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கேன். எல்லோரும் எனக்கும் தனுஷுக்கும் எனக்கும் போட்டி இருக்குனு சொல்லுவாங்க. ஆனா, எங்களுக்குள்ள அன்பு இருக்கு. அது இன்னிக்கும் இருக்கு. என்னிக்கும் இருக்கும். எங்களுக்கு  இடையில நிறைய பேர் நிறைய விஷயங்களை பண்ணியிருக்காங்க. ஆனா, அதையெல்லாம் மீறி இரண்டுபேரும் அன்போடு  இருக்கோம். இவ்வாறு சிம்பு பேசியுள்ளார்.