புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (21:19 IST)

சிம்பு மாதிரி என்னால் முடியாது: தனுஷ்!!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சக்க போடு போடு ராஜா படத்தின்  இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில், தனுஷ், சிம்பு, சந்தானம் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 
 
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் பின்வருமாறு பேசினார், கடந்த 2002 ஆம் ஆண்டு நானும், சிம்பும் ஹீரோவாக அறிமுகமானோம். ஆனால், சிம்பு 3 வயதிலிருந்தே நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது எளிது. ஆனால், நிலைத்து நிற்பது தான் கஷ்டம். ஆனால், சிம்பு வந்து 15 வருடம் ஆகிவிட்டது. இன்னும் சினிமாவில் இருந்து கொண்டே தான் இருக்கிறார். 
 
துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த போது, எனக்கு டான்ஸ் மாஸ்டர் அசோக் ராஜன் ஆட சொல்லிக் கொடுப்பார். அப்போது எல்லாம் எனக்கு ஆடவே வராது. ஆனால், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன்.
 
அப்போது அசோக்கும், ரஞ்சித்தும் சுக்குமலா, சுக்குமலான்னு பேசிக்கிட்டு இருந்தார்கள். நான் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பாடலை பாருங்க… அது மாதிரி தான் ஆட வேண்டும் என்று சொன்னார்கள். 
 
அதனைப் பார்த்த நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். இவரு என்ன இப்படி ஆடுறாரு. என்னால், இது மாதிரி ஆட முடியாது என்று கூறியுள்ளார். அப்போது மட்டுமில்லை. இப்போதும் என்னால் சிம்பு மாதிரி டான்ஸ் ஆடவே முடியாது. இதை நான் சிம்பு வரை கூறியது இல்லை என தெரிவித்தார்.