1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 ஜூன் 2025 (17:43 IST)

’தக்லைஃப்’ தோல்வியால் சிம்புவின் சம்பளம் குறைக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

கமல்ஹாசன் உடன் சிம்பு இணைந்து நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் சம்பளம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
’தக்லைஃப்’ திரைப்படத்தின் விளம்பரங்களின்போது, சிம்புவின் கதாபாத்திரம் தான் இந்தப் படத்திற்கு ஆணிவேர் என்றும், அவர்தான் படம் முழுவதும் நிறைந்திருப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு சிம்புவின் கதாபாத்திரம் 'டம்மியாக' இருந்தது என்று விமர்சனங்கள் எழுந்தன. 
 
இதன் காரணமாக, கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் நடித்திருந்தும் படம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது இருவருக்குமே பல சிக்கல்களை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
குறிப்பாக, சிம்பு ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், அந்தப் படங்களுக்கு ஏற்கனவே பேசப்பட்ட சம்பளத்தில் இருந்து தற்போது தயாரிப்பாளர்கள் குறைக்க முன் வருவதாகக் கூறப்படுகிறது. சிம்பு இதற்கு ஒப்புக்கொள்வாரா அல்லது தோல்வியை ஏற்றுக்கொண்டு குறைந்த சம்பளத்தில் நடிக்க சம்மதிப்பாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran