பிரபல நடிகை வயிற்றில் சுமப்பது என் குழந்தை தான் - வீடியோ வெளியிட்ட முன்னாள் காதலர்!

Last Updated: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (19:05 IST)
சர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்தின் வயிற்றில் வளர்வது எனது குழந்தை தான் என அவரது முன்னாள் காதலரும் யூடியூப் பரபலருமான  தீபக் கலால் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


 
பாலிவுட் சினிமாவின் சர்ச்சை நடிகைளுள் ஒருவரான நடிகை ராக்கி சாவந்த் தமிழில் என் சகியே, முத்திரை உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற குத்துப்பாடல்களுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இந்தி, தமிழ் , தெலுங்கி என பல மொழி படங்களில் ஐட்டம் நடனமாடி அடையாளம் பெற்ற  ராக்கி சாவந்த் சமீபத்தில் தான் தனது ரசிகர் ரிதேஷ் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக அறிவித்தார்.  


 
கடந்த ஜூலை 20ம் தேதி திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்றும்,  அவரது வயிற்றில் வளர்வது என் குழந்தை தான் என்று கூறி வீடியோக்களை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார் யூடியூபில் பிரபலரும் ராக்கி சாவந்த்தின் முன்னாள் காதலருமான தீபக் கலால். இந்த விவகாரம் தற்போது பாலிவுட் சினிமாவின் ஹாட் செய்தியாக பேசப்பட்டு வருகிறது. 
இதில் மேலும் படிக்கவும் :