திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (12:36 IST)

என் காதலருடன் பிக்பாஸ்க்கு வரேன்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்ச்சை நடிகை!

இந்தி திரை உலகில் எப்போதும் சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த் தன் காதலருடன் பிக் பாஸிற்கு வருகிறேன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 

 
பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர்போன நடிகை ராக்கி சவந்த் தமிழிலும் ஒரு சில ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13 சீசன் கூடிய விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் நடிகை ராக்கி சவந்த் தனது காதலருடன் ஜோடியாக கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.  வழக்கம் போல சல்மான் கான் தான் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு குறைவில்லாத வகையில் போட்டியாளரை இறங்கியுள்ளனர். 


 
அதேபோல் தமிழில் வரும் ஜூன் 23 ஆம் தேதி துவங்கவுள்ள பிக் பாஸ் 3 சீசனில் சர்ச்சைக்கு பெயர் போன தெலுங்கு , தமிழ் நடிகையான ஸ்ரீரெட்டி கலந்துக்கொள்ளவர் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.