செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (16:06 IST)

தன் ரசிகரை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை!

சர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் லண்டனைச் சேர்ந்த தனது ரசிகரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


 
ரசிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதை குறித்து தெரிவித்துள்ள நடிகை  ராக்கி சாவந்த், தன்னை மிகவும் ரசித்து நேசித்த தனது ரசிகர் ரிதேஷ் என்பவரை கடந்த ஜூலை 20ம் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். 
 
லண்டன் வாழ் இந்தியரான ரித்தேஷ்( 36)  நான் ஒருமுறை மிகுந்த கவலையில் இருந்தபோது "ஏன் இப்படிக் கவலையாக இருக்கிறீர்கள் என்று வாட்சாப் மெஸேஜ் செய்து கேட்டார். நான் அதை பார்த்து அதிர்ந்துவிட்டேன். நான் சோகத்தில் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என அவரிடம் கேட்டேன். நீங்கள் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று எண்ணும் அளவுக்கு நான் உங்களுடைய நீண்ட நாள் ரசிகன் என்று பதில் அளித்தார். அப்போதே அவர் மீது காதல் கொண்டேன். அவரை ஒருநாள் திருமணம் செய்வேன் என அப்போதே எனக்கு தெரியும். பின்னர் அவர் மீது அதீத காதல் வயப்பட்டு, இயேசுவிடம் நிறையவேண்டினேன். 


 
ஆனால், எங்களுக்குள் மத வேறுபாடு இருந்தது. நான் கிறிஸ்டியன் அவர் இந்து. ஆனால் அதெல்லாம் அவருடன் பழகியபோது தெரிவில்லை. அதனால்  அவருடைய மனைவியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு வேண்டினேன். ரித்தேஷ்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிகிறார்.
 
நான் திருமணம் செய்துகொண்டால் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என அஞ்சித்தான் திருமணம் செய்துகொண்ட தகவலை யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வந்தேன் என்று கூறியுள்ளார்.