ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 1 மே 2024 (16:18 IST)

சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கி சூடு.. கைதான நபர் திடீர் தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

salmankhan
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கி சூடு நடந்த நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீடு அருகே ஏப்ரல் மாதம் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த நிலையில் இது குறித்து அனுஜ்தாபன் என்பவர் கைது செய்யப்பட்டார். மும்பை சிறப்பு பிரிவு போலீசார் காவலில் இருந்த அவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை என்பதால் அது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விசாரணையின்போது தாக்கப்பட்டதால் இறந்தாரா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அனுஜ்தாபன் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாக  விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு துப்பாக்கியை கொடுத்தது யார்? கூலிப்படையை அமர்த்தியது யார்? எவ்வளவு ரூபாய் பணம் கை மாறி உள்ளது? போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு நான்கு லட்சம் பேசப்பட்டு முன் பணமாக ஒரு லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Edited by Mahendran