சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்.. அதிர்ச்சியில் பயணிகள்..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் ரயில்வே அதிகாரிகளின் ஓய்வறைகள் இருக்கும் பகுதியில் 26 வயதுடைய பெண் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது சடலத்தை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது
இறந்து போன பெண்ணின் அருகில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததாகவும் இதையடுத்து அவரிடம் இருக்கும் பணத்தை பிடுங்க கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது
பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருவர் மாடிக்கு சென்றது எப்படி? காவலர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? கொலை செய்யும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது
Edited by Siva