வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (15:15 IST)

தனக்கென தனி முத்திரை...இளம் பாடகரின் 20 ஆண்டு பயணம்…பாடகர் மகிழ்ச்சி….

இந்திய சினிமாவிலும் சரி கர்நாடக சங்கீத உலகிலும் சரி தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் காந்தக் குரலோன் கே.ஜே.யேசுதாஸ். அவரது மகன் விஜய் ஜேசுதாஸ் முறைப்படி கர்நாடக சங்கீதமும், முறைப்படி கற்றுத் தேர்ந்தவர்.

கடந்த 2000 ஆவது ஆண்டில் வித்தியாசாகர் இசையில் வெளியான ஸ்டார் என்ரா மலையாப் படத்தில் பாடகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஜேசுதாஸ்.  இதுவரை முந்நூறுக்கும் மேலான பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய தந்தையின் ஆசீர்வாதத்துடன் அவரது குரலும் விஜய் ஜேசுதாஸுக்குக் கிடைத்துள்ளது பெரும் பலம்.

பின்னர் மாரி முதல் பாகத்தில் தனுஷுடன் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இருபது வருடங்கள் ஆண்டு பயணம் குறித்து விஜய் ஜேசுதாஸ் கூறும்போது,நான் எனது பயணத்தில் என் தந்தையை நம்பி களத்தில் இறங்கவில்லை.எனது வழியில் நான் சென்று எனக்கு என ஒரு வழியை உருவாக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.