செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (17:50 IST)

இசைமேதை எனியோ மோரிக்கோன் மறைவு – ரசிகர்கள் அஞ்சலி!

இத்தாலியைச் சேர்ந்த பிரபல இசைமேதையான என்னியோ மோரிக்கோன் தனது 91 வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான பிரபல இசைமேதையான என்னியோ மோரிக்கோன், பல வெஸ்டன் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார். அவரது இசைத்துனுக்குள் பலமுறை தமிழில் பல படங்களில் சுடப்பட்டு காப்பி அடிக்கப்பட்டுள்ளன.

பல ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ள எனியோ மோரிக்கோன் தெ  ஹேட்புல் எய்ட் என்ற படத்துக்காக தனது 88 ஆவது வயதில் முதல் முறையாக ஆஸ்கர் விருது பெற்றார். ஆஸ்கர் வரலாற்றிலேயே அதிக வயதில் விருது பெற்ற நபர் என்ற பெருமைக்குரியவராக திகழ்ந்தார். இந்நிலையில் 91 வயதில் தனது வயது மூப்புக் காரணமாக இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு பல இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ரசிகர்கள் தங்கள் அஞ்சலியினை செலுத்தி வருகின்றனர்.