பர்ஸ்ட் லுக்கே காப்பியாம்: பிரபல நடிகரின் படத்துக்கு தடை
பிரல மலையாள நடிகரும் ஆக்சன் ஹீரோவான சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகிவரும் அவரது 250 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.
இங்குதான் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. அதாவது இப்படத்தை காப்பி அடித்ததாக பரவலாகப் பேசப்பட இந்தக் கதை எனது கதை என பிரபல மலையாள இயக்குநர் ஜினு ஆப்ரஹாம் கோர்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றம் இப்படத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோர்ட் இதுகுறித்து விளக்கம் கேட்டு சுரேஷ் கோபி படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
மேலும் , ஜினு ஆப்ரஹாம் இதுபற்றிக் கூறும்போது, தன்னிடம் உதவியாளராகப் பணிபுரிந்த மாஸ்யூஸ் என்பவருக்கு நான் எழுதி கடுவா படத்தின் கதை தெரியும். அதையே அவர் திருடி படமாக எடுத்து வருகிறார்கள். தற்போது கடுவா படத்தை நான் நடிகர் பிருத்விராஜ்-ஐ வைத்து உருவாக்கி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.