திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:09 IST)

’’வடிவேலுவுக்கான கதை...சம்பளம் வாங்காமல் நடித்த யோகிபாபு....’’ நெகிழ்ச்சி சம்பவம்

பாக்யா சினிமாஸ்  என்ற படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில்,  இயக்குநர் ஷக்தி சிதம்பம் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் பேய் மாமா.

இப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் முழு காமெடி திரைப்படம் ஆகும்.

 இப்படத்தின் இசை வெளியீடு விழா நேற்று வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு மனோபாலா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய யோகி பாபு, இப்படத்தி முதலில் வடிவேலு சாருக்குத்தான் பண்ணியது. அதில் நான் நீங்கள் நடிக்கீறீர்கள் என்று இயக்குநர் கூறினார்.   இப்படத்தின் கதைப் பிடித்திருந்தால் நடித்துள்ளேன்.அதேபோல் சம்பள விஷயத்தில் நான் கறாராக நடப்பதில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சமிபத்தில் ஒரு பெண் இயக்குநர் எனை சந்தித்து ஒரு கதை உள்ளது அதில் நீங்கள் நடிக்கணும் என்றார். மேலும் பெரிய பட்ஜெட் இல்லை. இப்படம் உருவானால்தான் தனக்குத் திருமணம் நடக்கும் என்று கூறினார். அதற்காக அவருக்குச் சம்பளமே இல்லாமல் நடக்கிறேன் என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் பலரும் யோகிபாபுவை பாராட்டி வருகின்றனர்.