1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (10:52 IST)

இது ஹீரோ பேஸ் இல்லை – தன்னையே கலாய்த்துக் கொண்ட யோகிபாபு!

நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள பேய் மாமா படத்தின் விழாவில் கலந்துகொண்ட யோகி பாபு எப்போதும் காமெடியனாக நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

வைகைப்புயல் வடிவேலு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகவிருந்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படம்  ஏற்ப்பட்ட ஒரு சில பிரச்னைகளால் படம் பாதியிலேயே நின்று போனது. இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டதாக கூறப்பட்டது.   இந்த கேப்பில் கிடு கிடுவென வடிவேலும் இடத்தை நிரப்ப சந்தானம் , சூரி போன்ற நடிகர்கள் வளர்ந்து வந்தார்கள்.

ஆனால், அவர்களுக்கும் கதாநாயக ஆசை வந்து காமெடி ரேஸில் இருந்து விலகிக்கொள்ள வடிவேலுவின் இடத்தை சரியாக பூர்த்தி செய்தவர் யோகி பாபு மட்டும் தான். அவரது யதார்த்தமான காமெடி , உடல் தோற்றம் உள்ளிட்டவை வெகுஜன ரசிகர்களால் விரும்பப்பட்டு குறைந்த கால இடைவெளியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தற்போது வடிவேலுவின் இடத்தில யோகி பாபு நிரப்பப்பட்டுள்ளார். 

பேய் மாமா என்ற பெயரில் வடிவேலுவை வைத்து படம் இயக்க இருந்த இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இப்போது யோகி பாபுவை வைத்து அந்த படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் அறிமுக விழாவில் பேசிய யோகிபாபு ‘இது ஹீரோ பேஸ்… என் முகம் அதற்கானது அல்ல. அதனால் எப்போதும் காமெடியனாகவே நடிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.