ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் கடந்த 21 ஆம் தேதி ரிலீஸாகி பெருவாரியான வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
லவ் டுடே வெற்றியை அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல என்று ப்ரதீப் ரங்கநாதன் டிராகன் படம் மூலமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது.
வெளியான மூன்று நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் லவ் டுடே போல டிராகன் படமும் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நடிகராக தனது முதல் இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூல் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை பிரதீப் பெறவுள்ளார்.