ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (07:37 IST)

இனிதே நடந்தது யோகிபாபு திருமணம்: சென்னையில் வரவேற்பு

இனிதே நடந்தது யோகிபாபு திருமணம்
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி திருத்தணியில் மஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் நடிகர் யோகிபாபு திருமணம் சற்றுமுன் முடிந்துள்ளது. நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும்  இன்று காலை யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.  வரும்  மார்ச்  மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெறவிருக்கும் திருமண வரவேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது