1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (09:45 IST)

யோகிபாபு நாயகனாக நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல லாபத்தை கொடுத்ததால் அவரை வைத்து ஹீரோவாக படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு காக்டெயில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
விஜய் முருகன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு சாய் பாஸ்கர் இசையமைக்கவுள்ளார். நவீன் ஒளிப்பதிவில் பாசில் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தின் டீசர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற தகவல்கள் இன்னும் ஓரிரு நாளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்