1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (22:06 IST)

யோகி பாபுவுக்கு ஜோடியாகிறாரா அஞ்சலி? அதிர்ச்சி தகவல்

முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகி பாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க உள்ள ஒரு பேய் படத்தில் அஞ்சலி நாயகியாகவும், யோகிபாபுவுக்கு ஜோடியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அஞ்சலி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சமீபத்தில் நாடோடிகள் 2’ என்ற படத்தில் அஞ்சலியின் அற்புதமான நடிப்பை பார்த்த அவரது ரசிகர்கள் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பதா? என தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவில்லை என்றும் பேய் வேடத்தில் அஞ்சலி நடிக்கவிருப்பதாகவும், அந்த பேயை அடக்கும் ஹீரோ வேடத்தில் யோகி பாபு நடிப்பதாகவும் இருவரும் ஜோடி இல்லை என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் ’கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபு கிட்டத்தட்ட நயன்தாராவுடனே ஜோடியாக நடித்திருக்கும் போது அஞ்சலி நடிப்பதில் என்ன தவறு? என்றும் யோகி பாபு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்