1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (17:15 IST)

யோகிபாபு-யாஷிகா நடிக்கும் ‘ஜாம்பி’ படத்தின் முக்கிய அப்டேட்

எஸ்3 பிக்சர்ஸ் தயாரிப்பில் புவன் நல்லன இயக்கத்தில் யோகி பாபு, யாஷிகா நடிப்பில் உருவாகி வரும் ஜாம்பி திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


 
இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்த ஷூட்டிங் அத்துடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யோகிபாபு , யாஷிகா ஆனந்த் ,  கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட  பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தில் ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ-க்ளைமேக்ஸ் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. விஜிபி ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த காட்சியில் யோகி பாபு, யாஷிகா உள்ளிட்டோருடன் சுமார் 200 பெண்கள் நடித்துள்ளனர்.
 
சென்னை-புதுச்சேரி இடையே ஈ.சி.ஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து இசை, டிரைலர், ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.