வடிவேலுவ தூக்கி போடு; யோகி பாபுவ புடிச்சி போடு: இம்சை அரசன் அப்டேட்

Last Updated: செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (20:18 IST)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம் வெளியாகி நல்ல வரெவேற்பை பெற்றது. 
 
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் எடுக்க நினைத்து மீண்டும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர்.
 
ஆனால், சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் முதல் கட்ட படப்பிடிப்போடு நின்றுவிட்டது. இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. வடிவேலுவை படத்தில் நடிக்க வைக்க எடுத்த பல முயற்சிகள் தோல்விலேயே முடிந்தது. 
 
இதனால் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகி பாபுவை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் என செய்திகள் வெளியாகியது. 
 
ஆனால், யோகி பாபு தரப்பினர் இந்த செய்தியில் உண்மையில்லை எனவும், இது போன்ர வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :