1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (22:15 IST)

படுக்கையில் இருக்கும் யாஷிகாவின் புகைப்படம் வைரல்!

படுக்கையில் இருக்கும் யாஷிகாவின் புகைப்படம் வைரல்!
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா சமீபத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்தார் என்பதும் அந்த விபத்தில் அவரது உயிர் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது 
 
இருப்பினும் அவர் வீடு திரும்பாமல் தனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. வீடு திரும்பினால் தனது தோழியின் ஞாபகம் வரும் என்பதால் அவரின் தோழி ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளார்
 
இந்த நிலையில் யாஷிகா படுக்கையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. மேலும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த உடன் கமெண்ட் செய்து வருகின்றனர்