செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:30 IST)

20 ஆண்டுகளுக்கும் மேலாக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட மம்மூட்டி… ஏன் தெரியுமா?

கேரள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி 21 ஆண்டுகாலமாக தனது கால் அறுவை சிகிச்சையை தள்ளி வைத்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரும் இந்திய சினிமாவிலேயே அதிக தேசிய விருதுகளையும் பெற்ற மம்மூட்டி 370 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கூறியுள்ளார்.

அதில்’ 21 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு விபத்து ஏற்பட்டதில் காலில் தசைநார் சேதமடைந்தது. அதை சரி செய்ய வேண்டுமென்றால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அப்படி செய்தால் காலின் நீளம் குறையும் என்று சொன்னதால் நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள் மட்டும் குட்டையாக இருந்தால் எல்லோரும் கேலி செய்வார்கள் என்பதால் அதை வேண்டாம் என சொல்லிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.