1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (14:00 IST)

விபத்து ஏற்படுத்தியது நான் இல்லை பாலாஜி தான் - அந்தர்பல்டி அடித்த யாஷிகா!

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார். 
 
இந்நிலையில் 2019ல் நடந்த யாஷிகாவின் விபத்து விவகாரம் குறித்து பிக்பாஸ் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, " கடந்த 2019 அக்டோபர் 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில், கார் ஒன்று  சென்றுகொண்டிருந்தது. அங்கு, சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பரத் என்பவர் மீது அந்த கார் மோதி அவர் படுகாயமடைந்தார். 
 
அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும் விபத்து நடத்த உடனே அவர் வேறு காரில் ஏறி சென்றுவிட்டார் என்றும் அன்றைய செய்திகள் வெளியாகியது. அதற்கு மறுப்பு தெரிவித்த யாஷிகா, "அது தன்னுடைய கார் இல்லை என்னுடைய நண்பர்கள் செய்த விபத்து செய்தியை கேட்டு தான் அங்கே சென்றதாவும் கூறி இருந்தார்.
 
இதையடுத்து ஜோ மைக்கேல் அந்த கரை ஓட்டிச்சென்றது பிக்பாஸ் பாலாஜி என பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாலாஜி, " தான் அந்த விபத்தை ஏற்படுத்தவில்லை, எனக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பணம் சம்பாதிக்க எப்படிவேணாலும் செய்தியை பரப்புவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.