செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph

நல்ல வேலை என் முகத்துக்கு ஒன்னும் ஆகல... யாஷிகாவின் பதிவை வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சை கொடுக்கப்பட்டதில் இப்போது கொஞ்சம் உடல்நலம் தேறி வருகிறார்.
 
விபத்தில் தோழி இறந்ததால் மிகுந்த சோகத்தில் இருந்த யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில் dp புகைப்படத்தை நீக்கியதோடு அக்கவுண்ட்டை privetல்  வைத்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாவில், ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள யாஷிகா,  இனி ஒருபோதும் என்னால் இப்படி செய்ய முடியாது என புலம்பியுள்ளார். மேலும், இயற்கை உபாதை கூட படுக்கையில் கழிக்கும் என்னால் இன்னும் 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. நல்லவேளை முகத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என தன்னை தேற்றியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், நீயெல்லாம் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் இதுல முகம் எதுவும் ஆகலன்னு பீலிங்ஸ் வேற போவியா... என விமர்சிக்கின்றனர்.