சித்ரா அம்மாவின் இனிமையாக குரலில் வால்டர் படத்தின் "யாரை தேடி" பாடல்!

papiksha| Last Updated: சனி, 15 பிப்ரவரி 2020 (14:45 IST)
தமிழ் சினிமாவில் நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திரைத்துறை நுழைந்திருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் "வால்டர்" என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படப்பிடிப்பும் விறு விறுப்பாக  நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. சிபிராஜூக்கு ஜோடியாக நடிகை ஷிரின் கான்ச்வாலா நடித்துள்ள இப்படத்தில்  ரித்விகா, சனம் ஷெட்டியும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 
 
டாக்டர் பிரபு திலக் தயாரித்துள்ள இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க இருந்தார். ஆனால், அவர் இயக்கம் படங்களில் பிஸியாக இருப்பதால் அவரின் கால் சீட் கிடைப்பதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டதையடுத்து அவரது ரோலில் நடிகரும்  , ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள "யாரை தேடி" என்ற மெலடி பாடல் வெளியாகியுள்ளார். பாடகி சித்ரா பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :