ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (10:23 IST)

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியா தயாரிக்கிறது . இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதற்காக இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இளையராஜாவோடு நெருக்கமாகப் பழகியவர்கள், அவரின் நண்பர்கள் மற்றும் அவரின் சொந்த ஊர் மனிதர்கள் ஆகியோரை சந்தித்து தகவல்களைத் திரட்டினார். இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக அவர், இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான எஸ் ராமகிருஷ்ணன் இந்த படத்துக்குத் திரைக்கதை எழுதுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.