ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (08:16 IST)

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் ரிலீஸ்… அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திலிருந்து கோல்டன் ஸ்பேரோ என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸானது. இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் பேசுகையில் “கோல்டன் ஸ்பேரோ பாடல் இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து ஹிட்டடித்துள்ளது. இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து மூன்று பாடல்கள் ரிலீஸாகவுள்ளன” எனக் கூறியுள்ளார்.