திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:58 IST)

நாவலின் காப்பியா கிடார் கம்பி மேலே நின்று படம்? எழுத்தாளர் சந்தேகம்!

எழுத்தாளர் பா ராகவன் எழுதிய இறவான் என்ற நாவலின் காப்பிதான் கௌதம் மேனன் இயக்கிய கிடார் கம்பி மேலே நின்று திரைப்படம் என்று புகார் எழுந்துள்ளது.

நவரசா ஆந்தாலஜியில் நடிகர் சூர்யா நடிக்க, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம் கிடார் கம்பி மேலே நின்று. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் பணியாற்ற கதாநாயகியாக பிரயாகா மார்டின் நடித்திருந்தார். ஆனால் வழக்கமான கௌதம் மேனன் காதல் க்ளிஷே திரைப்படமாக இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படம் எழுத்தாளர் பா ராகவனின் இறவான் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த எழுத்தாளர் இன்னும் அந்த படத்தைப் பார்க்கவில்லை என்றும் பார்த்ததும் இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.