1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:38 IST)

நாளை வெளியாகும் ஜி வி பிரகாஷ் படத் தலைப்பு!

நடிகர் ஜி வி பிரகாஷ் இப்போது சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேலன் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க உள்ளதாம். இந்த படத்துக்கு கலைமகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நாயகியான காயத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் போதுமான வாய்ப்புகள் இல்லாததால் இயக்குனர் ஆவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்த படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாளை இந்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.