1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (17:00 IST)

பீஸ்ட் படத்தில் தனுஷின் பங்களிப்பு… எதிர்பார்ப்பை எகிற வைத்த செய்தி!

நடிகர் தனுஷ் பீஸ்ட் படத்தின் ஒரு பாடலை பாடி எழுத உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்கள் நடிப்பதாகவும், அதில் ஒருவராக மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மற்ற ஒரு  கதாபாத்திரங்களில் இயக்குனர் செல்வராகவன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது வில்லன் கதாபாத்திரத்தில் சமீபத்தைய வைரல் ஸ்டார் டான்ஸிங் ரோஸ் சபீர் நடிக்க உள்ளாராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகர் தனுஷ் எழுதி பாட உள்ளதாக சொல்லப்படுகிறது. அனிருத்துடனான மனக்கசப்புக்குப் பின்னர் இப்போது அவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை எழுதிப் பாடுமாறு அனிருத் கோரிக்கை வைத்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.