திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (23:22 IST)

’தல ‘தோனியை மிஸ் செய்கிறேன்...ரசிகர்களிடம் கூறிய கோலி !!

இந்திய கிரிக்கெட் அணியில் மூன்றுவித கிரிக்கெட் கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த வெற்றிக் கேப்டன் தோனி.

அவர் சமீபத்தில் அனைத்துச் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். டி-20 ஐபிஎல் 2020 போட்டியிலும் அவர் தலைமையிலான சென்னை அணி பலத்தை விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்நிலையில் தற்போது, ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி. ஒருநாள் போட்டில் கோட்டைவிட்டாலும்கூட டி-20 தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில்  மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோலியிடம், We Miss You Dhoni என எழுதப்பட்டிருந்த பதாகைகளைக் காண்பித்தனர்.

அதற்கு கோலி me too என்று பதிலளித்தார்.  இதுகுறித்த ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.