செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (17:47 IST)

சாமி படத்தின் வெற்றிக்கு மது விருந்தா? படத்தில் ஒன்று நிஜத்தில் வேறொன்றா??

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன்.  இப்படத்தை வேல்ஸ் இனடர்நேசனல் பிலிம்ஸ் இயக்கி இருந்தது..

இப்படம் ஓடிடி தளத்தில்  வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. எனவே  இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜிக்கு  தயாரிப்பு நிறுவனம் பிளாக் பஸ்டர் ஹிட் என்ற விருதினைக் கொடுத்துள்ளது.

மேலும், இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சக்ஸஸ் பார்ட்டி வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில், பலரும் சரக்கு மற்றும் அசைவ உணவு ஐயிட்டங்கள் இடம் பெற்றிருந்ததற்கு விமர்சனம் எழுந்துவருகிறது.மேலும் இப்படத்தில் கூறியது ஒன்று நிஜத்தில் வேறொன்றா?? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி போலி சாமியார்கள் அரசியல்வாதிகளை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.