அஜித்தின் ‘வி’ செண்டிமெண்டைப் போலவே இந்த செண்டிமெண்டும் தொடருமா?

ajith
cm| Last Modified வியாழன், 15 மார்ச் 2018 (11:35 IST)
அஜித்தின் ‘வி’ செண்டிமெண்டைப் போலவே இந்த செண்டிமெண்டும் தொடருமா என அஜித் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.


 
அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு என மூன்று காமெடியன்கள் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சிவா – அஜித் கூட்டணியின் ‘வி’ செண்டிமெண்ட்படி ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த மூன்று படங்களிலும் அஜித்துக்கு அப்பா, அம்மா என யாருமே கிடையாது. தம்பி, தங்கை, மனைவி, காதலி உறவுகள் மட்டுமே இருந்தன. அந்த செண்டிமெண்ட், இந்தப் படத்திலும் தொடருமா? என்ற கேள்வி அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :