நயன்தாராவைப் பற்றி சிம்பு என்ன சொன்னார் தெரியுமா?
நயன்தாராவைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார் சிம்பு.
நயன்தாராவும், சிம்புவும் ஒருகாலத்தில் காதலர்களாக இருந்தனர். பின்னர், இருவரும் பிரிந்து விட்டனர். நயன் தற்போது விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகிறார். சிம்புவோ சிங்கிளாக இருக்கிறார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாரா பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் சிம்பு.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்புவிடம், நயன்தாரா குறித்து கேட்கப்பட்டது. “நான் ‘வல்லவன்’ படம் எடுத்த சமயம். நயன் உதட்டை நான் கடித்து இழுப்பது போல போட்டோஷூட் நடத்தி, போஸ்டராகவும் வெளியிட்டோம். அது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.
எனவே, இதுபற்றி நயன் என்ன நினைப்பாரோ என்று நினைத்து கவலையாக இருந்தது. ஆனால், ‘இது எனக்குத் தொழில். நீங்கள் இயக்குநர். நீங்கள் சொல்வதை நான் செய்வேன்’ என்று கூறி அதன்பிறகு அந்தக் காட்சியிலும் நடித்துக் கொடுத்தார் அவர். இன்றைக்கு இவ்வளவு பெரிய ஸ்டாராக இருக்கிறார் நயன் என்றால், அதுதான் காரணம்” என்று அதற்குப் பதில் அளித்துள்ளார் சிம்பு.