1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:45 IST)

தாமதமாகும் வலிமை திரைப்படம்… கார்த்தியை இயக்குகிறாரா சுதா கொங்கரா?

வலிமை படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் நிலையில் சுதா கொங்கரா கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் துரோகி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. ஆனால் இவர் மீது கவனம் பெற வைத்த திரைப்படம் என்றால் அது இறுதிச் சுற்றுதான். அதன் பின்னர் அவர் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து அவர் கோலிவுட் கதாநாயகர்களால் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார்.

இந்நிலையில் சுதா கொங்கரா வலிமை படத்துக்குப் பின் அஜித் நடிக்கும் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை இயக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிய அடுத்த வருடம் ஆகும் என்பதால் குறுகிய காலத்தில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.