1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (20:14 IST)

'லால் சலாம்' பொங்கலுக்கு வெளியாகுமா? லைகா நிறுவனம் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் தீபாவளி விருந்தாக வெளியானது.

இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகள் ரஜினியின் மாஸ் காட்சிகள், ஏ.ஆர்.ரஹ்மான் இசை  உள்பட பல்வேறு அம்சங்கள்  இருப்பதால்  இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த்  உள்ளிட்டோர்  நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என பட நிறுவனம்  உறுதி செய்துள்ளது.

மேலும், லால் சலாம் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.