வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (20:11 IST)

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

Mansoor Alikhan
நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான்  பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதற்கு  நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தச் சம்பவத்திற்கு தெலுங்கு பவர் ஸ்டார் சிரஞ்சீவி இதற்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மன்சூர் அலிகானுக்கு இயக்குனர் பாரதிராஜாவும் கண்டனம் தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,   நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து   மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.