1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (19:04 IST)

தன் திறத்தால் மரியாதையை ஈட்டியவர்- எஸ்.எஸ். பத்ரிநாத் மறைவுக்கு கமல் இரங்கல்

புகழ்பெற்ற கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்று சங்கர நேத்ராலயா மருத்துவமனை. இந்த மருத்துவமனை நிறுவனர்  மற்றும் தலைவரான  டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்  உடல் நலக்குறைவால் பத்ரிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 83.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து  நடிகர் கமல்ஹாசன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''புகழ்பெற்ற கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் மறைவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. 
 
பல நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களிடையேயும் தன் திறத்தால் மரியாதையை ஈட்டியவர். லட்சக்கணக்கானவர்களுக்கு பார்வைச் செல்வத்தை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி,  தொடர்ந்து பணியாற்றி வந்தவர். 
 
மருத்துவர் பத்ரிநாத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர் நம்மோடு இல்லையென்றாலும், ஏராளமானவர்களின் கண்களிலும், அவர்தம் குடும்பத்தாரின் இதயங்களிலும் என்றும் இருப்பார்'' என்று தெரிவித்துள்ளார்.