பதஞ்சலி நிறுவனத்தில் பணியாற்றும் 83 பேருக்கு கொரோனா தொற்று
பதஞ்சலி நிறுவனத்தில் பணியாற்றும் 83 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனில் என்ற மருந்தை கண்டுபிடித்த பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து என்று விளம்பரம் செய்தது/ இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது/ உத்தரகாண்ட் மாநிலத்தில் இயங்கி வரும் பதஞ்சலி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 83 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது/ இதனை அடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் அந்த ஆலையில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் மருந்தை கண்டுபிடித்த பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது