அந்த பாடலை கேட்டு மனைவி செருப்பால் அடிச்சாங்க - செல்வராகவன்!

Last Updated: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:10 IST)
தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் 2002-ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட மெகாஹிட் வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி நடிகராக வலம் வருகிறார். 


 
செல்வராகவன் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து என்ஜிகே  படத்தை இயக்கியுள்ளார். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பரவலாக பேசப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் எஸ்ஜே  சூர்யாவை வைத்து இவர் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் தான் கிடக்கின்றது 
 
சமீபத்தில் இப்படத்தை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய செல்வராகவன், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா’ என்ற பாடலை கேட்டுவிட்டு என் மனைவி கீதாஞ்சலி செருப்பால் அடித்தார். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த பாட்டை கேட்டுவிட்டு என் மீது கோபப்பட்டனர். ஆனாலும் அந்தப்பாடலை நான் நீக்கவில்லை. ஏனென்றால் அந்த படத்திற்கு இப்பாடல் அவசியமானதாக இருந்தது என கூறினார் செல்வராகவன்.
 


இதில் மேலும் படிக்கவும் :