1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:39 IST)

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்… பிரபல பாடகர் மீது மனைவி புகார்!

பஞ்சாப்பின் பிரபல பாடகரான யோ யோ ஹனி சிங் மீது அவரின் மனைவி அடுக்கடுக்கான புகார்களை வைத்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் பாடகர்களில் ஒருவர் யோ யோ ஹனி சிங். இவர் அனிருத் இசையில் எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்நிலையில் இப்போது அவரின் மனைவி ஷாலினி ஹனிசிங் மீது போதைப்பழக்கம் மற்றும்  மற்ற பெண்களுடன் பாலியல் உறவு ஆகியக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இது சம்மந்தமாக கீழ் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்மந்தமாக நீதிமன்றம் ஹனி சிங்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.