1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:34 IST)

பூண்டு விலை வீழ்ச்சி… விவசாயிகள் கவலை!

பூண்டு விலை வீழ்ச்சி… விவசாயிகள் கவலை!
தமிழகத்தில் பூண்டு அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அதனை பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டு இப்போது அறுவடை ஆகி வருகிறது. சாகுபடியின் போது மழைப் பெயததால் பூண்டு விளைச்சல் குறைவாகவே இருந்தது. இதனால் விலை அதிகமாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது பூண்டு விலை மிகவும் குறைந்துள்ளதாம். இதற்கு வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு விலையை விட பாதி விலைக்கே இப்போது பூண்டு விலைபோவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.