1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (16:19 IST)

ரஜினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது இதற்காகதான்!

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை முடித்து சென்னைக்கு வந்தபின்னர் முதல் வேளையாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை காரணமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சூழல் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இப்போது மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டதன் காரணம் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் ரஜினி.  அங்கு செல்ல வேண்டும் என்றால் தடுப்பூசி போட்டிருந்தால்தான் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி என்பதால் இப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளாராம்.