செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (16:08 IST)

ரஜினியை இயக்கக் கொக்கிபோடும் மருமகன் தனுஷ்!

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் தனது திரையுலக வாழ்வின் இறுதி காலத்தில் இருக்கிறார். இன்னும் சில படங்களில் நடித்துவிட்டு அவர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தேசிங் பெரியசாமி ஆகியோர் ரஜினி படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதில் ஒரு குறுக்கீடாக தனுஷ் ரஜினியை வைத்து ஒரு கதையை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக கதை எழுதும் பணிகளை மேற்கொண்டுள்ளாராம். விரைவில் ரஜினிக்கு அந்த கதையை சொல்லவும் உள்ளார் என சொல்லப்படுகிறது.