1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (15:15 IST)

சேரனுக்கு இதெல்லாம் தேவையா...?

தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் காலம் பேசும் அற்புதமான படைப்புகளை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சேரன். சமூகத்திற்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தான் இயக்கம் படங்ககளில் சாமானியர்களின் வாழ்க்கையை அவர்களின் நிலையில் இருந்து திரையிலிட்டு காட்டிய பெருமை சேரனையே சேரும். 


 
அந்த வகையில் அவரது பொக்கிஷ படைப்புகளான பொற்காலம், பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் என விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்ககளை மட்டுமே இயக்கியிருந்தாலும் அது அத்தனையும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய உன்னத படைப்புகள். 
 
தமிழ் திரையுலகில் சேரன் ஒரு இயக்குனராக மட்டுமல்லாது, நல்ல நடிகராகவும் பாராட்டப்பட்டவர் . அந்தவகையில் அவரது மென்மையான நடிப்பில் வெளியாகி ரசிக்கப்பட்ட ராமன் தேடிய சீதை, யுத்தம் செய், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்ககள்  இன்றளவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டால் குடும்பத்துடன் அமர்ந்து பார்ப்பார்கள். 


 
இப்படி தனது ஒவ்வொரு படைப்புகளிலும் தமிழ் சினிமாவிற்கு புதிய சாதனையை தேடி தந்த இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா என அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகிவிட்டனர். காரணம், கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரனுக்கு அசிங்கமும் , அவமானமும் நாளுக்கு நாள் அவரை வாட்டி வதைக்கிறது. தன் படங்களில் கூட பெண்களை கண்ணியத்துடன் காட்டிய சேரன் மீது மீரா மிதுன், தன்னை தகாத இடத்தில் தொட்டுவிட்டார் என அபாண்டமாக பழி சுமத்திய போதே... நீங்கள் வீட்டை விட்டு வெளியேறிடுங்கள் என்று ரசிகையின் கோரிக்கை கடிதத்தை பார்த்த நம் அனைவரும் அவரின் கண்ணியத்தை பார்த்து வியந்தோம். 


 
ஆனால்.. தற்போது மீண்டும் அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று சரவணன் மிகவும் ஏளனமாக சேரனை திட்டுவதை ஒரு சாமானிய மக்களே பார்த்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ஆனால் அதையையெல்லாம் கேட்ட பிறகும் சரவணனை மரியாதை குறையாமல் பேசும் சேரனின் பொறுமை பலரையும் வியக்கவைக்கிறது. " நான் ஹீரோவாக நடித்தபோது நீ அசிஸ்டன்ட் டைரெக்டராக வேலை பார்த்தவன் தானே" என சேரனை இழிவாக பேசிய சரவணனுக்கு நடிப்பதற்கான வாய்ப்பையே இன்னொரு இயக்குனர் போட்ட பிச்சை தான் என்பதை அந்த காட்டுமிராண்டிக்கு எப்படி புரியவைப்பது.