திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (19:10 IST)

"வெளியே வந்தால் செருப்பால் அடிக்க மாட்டாங்களா"? சேரனை விளாசிய மனோபாலா!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் சேரன் - மீரா மிதுன் விவகாரம் தான். தற்போது அதை குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு நடிகர் மனோ பாலா பேட்டியளித்துள்ளார். 


 
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அத்தனையும் ஸ்கிரிப்ட். அவர்கள் பேசும் அத்தனை வசனங்களும் யாரோ ஒருவர் எழுதி கொடுத்து பேச வைப்பதாக தான் இருக்கும். அப்படியிருக்கும் போது சேரன் மீராவை தவறாக தொட்டதாக சொன்னது பொய். ஒருவேளை அப்படியெல்லாம் நடந்திருந்தால் வெளியே வந்ததும் பொதுமக்கள் செருப்பால் அடிக்கமாட்டாங்களா என்று மனோ பாலா கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும், சேரனை போல உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.