திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:21 IST)

விக்ரம் வேதா ரீமேக்… அமீர்கான் நடிக்க மறுத்தது ஏன்?

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்க மறுத்தது ஏன் என்பது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இடையில் அமீர்கான் வெளியேறி விடவே, அவருக்கு பதிலாக ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்போது அமீர்கான் வெளியேறியது ஏன் என்பதற்கானக் காரணம் வெளியாகியுள்ளது. அமீர்கான் படங்களுக்கு சைனாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதனால் கதைக்களனை சைனாவில் நடப்பது போல மாற்ற சொல்லி அவர் கேட்டதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர்களும் மறுத்ததுமே காரணம் என சொல்லப்படுகிறது.