1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:12 IST)

பவர்ஸ்டார் பவன் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி!

தெலுங்கு திரை உலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பவன் கல்யாண் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ’வக்கீல் சாஹேப்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் புரமோஷன் பணிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டிருந்த பவர்ஸ்டார் பவன்கல்யாண் அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன/ பவர் ஸ்டார் பவன் கல்யாண் என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்