1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:20 IST)

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் சஞ்சய் லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது முதல் சஞ்சய் இயக்கப் போகும் படத்தில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மூலம் ஏ ஆர் ரஹ்மானின் மகன் ஏ ஆர் ஆர் அமினை அறிமுகப்படுத்த சஞ்சய் விருப்பப்படுகிறாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனமோ இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்தால் நன்றாக் இருக்கும் என பரிந்துரைத்துள்ளதாம்.