வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (17:40 IST)

கண்களை தானம் செய்து ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட நடிகர் ஜெயராம்

jeyaram
கண் தான விழிப்புணர்வு பேரணியில், தனது கண்களை தானம் செய்து  ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார் நடிகர் ஜெயராம்.

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஜெயராம். இவர்  பொன்னர் சங்கர், சரோஜா, சூர்யன், தெனாலி, பரமசிவம், பிரண்ட்ஸ்,  பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் நடிப்பதுடன், மிகிக்ரி கலைஞராகவும், செண்டை தட்டும் கலைஞராகவும் அறியப்படுகிறார்.

இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த கண் தான விழிப்புணர்வு பேரணியில், தனது கண்களை தானம் செய்து  ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார் நடிகர் ஜெயராம்.

இவரது செயலுக்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவரது மகன் காளிதஸ் ஜெயராம் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.